எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆக காரணம் இவங்க தானாம்.! களவானித்தனத்தால் சிக்கிய கலர்ஸ்!

பிரபல நடிகை சிம்ரனை வைத்து கலர்ஸ் நிறுவனம் மோசடி விளம்பரங்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள் மற்றும் ஆண்களின் உடல் எடையை குறைப்பதற்கு இறங்கிவரும் புகழ்பெற்ற நிறுவனங்களில் கலர்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தன்னுடைய கிளைகளின் மூலம் இயங்கி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டி என்னும் பகுதியில் ஒரு கிளை இயங்கி வருகிறது.

உணவு கட்டுப்பாடு இல்லை, மருந்து இல்லை; உடனே சேர்ந்தால் 50 சதவீத கட்டண தள்ளுபடி; 2 வாரங்களில் 20 கிலோ எடை குறையும் அழகிய மனதை கவரும் விளம்பரங்களின் மூலம் வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கவர்ந்து வருகிறது. அதே நேரத்தில் பிரபல கோலிவுட் நடிகையான சிம்ரன் ஸ்லிம்மாக இருப்பதற்கு நாங்கள் தான் காரணம் என்ற பொய்யான விளம்பரத்தையும் அளித்து வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான அழகரசன் என்பவர் இந்த நிறுவனத்தில் உடல் எடையை குறைப்பதற்காக சேர்ந்துள்ளார். 103 எடையுடன் இருந்த இவரை கலர்ஸ் நிறுவனம் வெப்பப் படுக்கையில் துணியின்றி படுக்கவைத்து எடையை குறைக்க முயற்சி செய்தது.

2 முறை முயற்சி செய்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை. உடல் முழுவதிலும் சூட்டு கொப்புளங்கள் மட்டுமே அதிகரித்தன. இந்நிலையில் சிகிச்சை எதுவும் பலனளிக்காது பணத்தை திருப்பிக் கேட்டபோது தர முடியாது என்று மறுத்துவிட்டனர் என்று அழகரசன் பள்ளிப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவரைப் போன்றே மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் உடல் எடையை குறைப்பதற்காக 49,500 ரூபாயை இந்த நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். 11 முறை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் கொஞ்சம் கூட உடல் எடை குறையவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்துவிட்டதாக அதே காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

இவ்விரு புகார்கள் குறித்து காவல்துறையினர் அந்த நிறுவனத்தினர் உடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கலர்ஸ் நிறுவன தரப்பில் கூறுகையில், "பணத்தை திரும்பப் பெறும் நோக்கத்தில் இதுபோன்ற பொய்யான பரப்புரைகளை சில வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்" என்று பதிலளித்துள்ளது.

காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பள்ளிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.