பிரபல சின்னத்திரை நடிகை தன்னுடைய கணவர் குறித்து வெளியிட்டுள்ள செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேர்ந்து வாழ்ந்தாலும் அவர் என் கணவன் இல்லை..! ஆனால்? நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா வெளியிட்ட சீக்ரெட் தகவல்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. அதன் பின்னர் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தொடர்ந்து பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் தற்போது "ஆயுத எழுத்து" என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ராகுல் சுதர்ஷன் என்ற இளைஞர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அப்போதிலிருந்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவர் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது, "என்னுடைய பல நேர்காணல்களில் பிரவுன் கலரில் பெரிய தாடி வைத்த பையனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியது உண்டு. அது தற்போது நிறைவேறயுள்ளது. எனக்கு தமிழில் கவிதை, கட்டுரை என ஆர்வம் உள்ளது போன்று என்னுடைய காதலரான ராகுல் சுதர்ஷனுக்கு ஆங்கிலத்தில் புலமை உண்டு.
இதன்மூலம் தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் காதலித்து வருகின்றோம். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து காதலர்களாகவே பயணிக்க உள்ளோம். தற்போது தான் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்" என்று கூறினார்.
இந்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.