நள்ளிரவு! ஆயிஷா தான் கூப்டா..! விஷ்ணுவும் இருந்தான்! சத்யா சீரியல் இந்திரன் வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான "சத்யா" தொடர் பிரபலங்கள் பல்வேறு உண்மைகளை கூறியிருக்கிறது மக்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.


சன் டி.வி.யில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் மெகா தொடர்களில் "சத்யா" தொடரும் ஒன்று. இந்த தொடரில் விஷ்ணு நாயகனாகவும், ஆயிஷா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் விஷ்ணு-ஆயிஷா திருமணத்திற்கு பிறகு தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

சமீபத்தில் கங்கா நகர் பகுதியில் இந்த தொடர் கானா பாட்டு, ஆட்டம் பாட்டம் என்று பட்டையை கிளப்பியது. விஷ்ணு, ஆயிஷா ஆகியோருக்குப் பிறகு இந்த தொடரில் மிகவும் பிரபலமானவர் குள்ளபூதம் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்திரன். இவர் திரைக்கு முன்னும் பின்னும் இந்த காதல் ஜோடிக்கு மிகவும் நெருக்கமானவராவார.

இதனிடையே அவர்களை பற்றி சில செய்திகளை இந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "திருமண எபிசோட்டை விட, மறுவீடு அழைப்புக்கான எபிசோட் மிகவும் நன்றாக இருந்தது. கங்கா நகரில் ஷூட்டிங் நடந்தபோது கானா இசை கலைஞர்கள், பொதுமக்கள், என பலதரப்பட்ட மக்களும் அந்த நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

நாங்கள் மூன்று பேரும் செம கிளோஸ். திடீரென்று ஒருநாள் திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்று இருவரும் என்னை அழைத்தார்கள். திருப்பதி வரை காரில் சென்ற நாங்கள், நடக்க வேண்டும் என்று என்னிடம் கூறினர். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இருந்தாலும் வேறு என்ன செய்ய; நட்பாயிற்றே. நானும் அவர்களுடன் நடந்து செல்ல தொடங்கினேன். கிட்டத்தட்ட 3500 படிக்கட்டுகளை தாண்டி ஏறி வந்தோம்.

சாமி தரிசனம் முடித்தோம்‌. வழியெங்கும் ஆயிஷாவுக்கு ஃபேன்ஸ் இருந்தனர். தெலுங்கு சீரியல் வேணும் நடிப்பதால் இந்த வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு மிகவும் பக்தியானவர். ஆதலால் ஆயிஷா மிகவும் சிரமப்பட்டு வேண்டுதலை மேற்கொண்டார்" இந்திரன் கூறினார். இந்த பேட்டியானது ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.