முதல் கணவன் செத்து ஒரு வருடம் தான்..! காதலனை 2வது கணவன் ஆக்கிய விஜய் டிவி மைனா..!

சரவணன் மீனாட்சி புகழ் மைனா 2-வது திருமணம் செய்யப்போவதாக வெளியிட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நடித்து புகழ் பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்தப்பட்டியலில் நந்தினி என்பவரும் ஒருவர். இவர் அந்த தொடரில் "மைனா" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதன் மூலம் இவர் மைனா என்று அறிமுகமானார். சரவணன் மீனாட்சி தொடரின் வெற்றியை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வலம் வந்தார். "வம்சம்" என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு "கேடி பில்லா கில்லாடி ரங்கா" எனும் படத்திலும் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 2017-ஆம் ஆண்டில் கார்த்திகேயன் என்ற ஜூம் மாஸ்டருடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்த இருவரும் திடீரென்று பிரிந்து செல்ல நேரிட்டது. குடும்ப சூழல் காரணமாக கார்த்திகேயன் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு மன உளைச்சல் காரணமாக மைனா நடிப்பு துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் "நம்ம வீட்டு பிள்ளை" எனும் படத்தில் நடித்தார். தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வருகிறார். 

இதனிடையே இவருக்கும் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.