பெற்ற குழந்தையின் கண் முன்னால் நடிகை நீபாவுக்கு ஏற்பட்ட சோகம்! என்னாச்சு தெரியுமா?

பிரபல சீரியல் நடிகை நீபா தன் குழந்தையின் கண்முன்னே தடுமாறி விழுந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவர் நீபா. இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையுலகில் நடன இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், இளையதளபதி விஜய், அசின், வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்து வெற்றியடைந்த "காவலன்" இவர் வடிவேலுக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் தோட்டா, அம்முவாகிய நான் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் நடிகை நீபா தன்னுடைய குழந்தையுடன் கலந்து கொண்டார். இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் நீபா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ஒருகட்டத்தில் எதிர்பாராவிதமாக தன் செல்ல குழந்தையின் கண்முன்னே தடுமாறி பலமாக கீழே விழுந்தார். இந்த நிகழ்வானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து நடிகை நீபாவை அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது சிறிது நேரம் அந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.