வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு..! சொத்துகள் யாருக்கு?

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகர் குஷல் பஞ்சாபி. இவருடைய வயது 37. இவர் ஐரோப்பாவை சேர்ந்த ஆல்ட்ரே டொல்ஹன் என்பவரை காதலித்தார். தம்பதியினருக்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் கியான் என்ற குழந்தையுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நேற்று தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இவர் பகிர்ந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய அறையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவமறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய அறையிலிருந்து குஷால் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

அந்த கடிதத்தில் குஷால் "என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை. நானிறந்த பிறகு என்னுடைய சொத்துக்களில் 50 சதவீதத்தை என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிக்கும் கொடுத்து விடுங்கள். மீதமுள்ள 50 சதவீதத்தை குழந்தையுடன் வருங்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

இருப்பினும் காவல்துறையினர் அவருடைய மரணத்திற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடைய இறப்பு குறித்து அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது மும்பை சின்னத்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.