சிவப்பு விளக்கு ஏரியாவில் சிக்கிய டிவி பிரபலம்..! போலீசாரிடம் கதறிய நடிகர்! காரணம் இது தான்!

பிரபல டிவி நடிகர் ஒருவர் சிவப்பு விளக்கு பகுதியில் காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவமானது விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகர்களும் நடிகைகளும் அவ்வப்போது குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவது தற்போது வழக்கமாகியுள்ளது. இதே போன்ற ஒரு நிகழ்வானது விசாகப்பட்டினத்தில் அரங்கேறியுள்ளது.

ஜபர்தஸ்த் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டோரா பாபு என்பவர் காமெடியனாக நடித்து வந்தார். இதனிடையே இவர் எக்ஸ் ரேட்டிங் கொண்ட படங்களிலும், பி கிரேட் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விசாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் விபசாரம் நடந்து வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்து வந்தன.

உடனடியாக காவல்துறையினர் ஒரு நல்ல குழுவை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது டோரா பாபு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

தன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று டோராபாபு காவல்துறையினரிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.