மலையாள திரையுலகில் சில தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பிற்காக என்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு மெசேஜ் அனுப்பியதாக நடிகை காயத்ரி சுரேஷ் கூறியுள்ளார்.
அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் அந்த படத்தில் நடிக்க முடியும்! இளம் நடிகைக்கு வலை விரிக்கும் தயாரிப்பாளர்!

தொடக்கத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை காயத்ரி சுரேஷ் தற்போது தெலுங்கிக்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமாரனுடன் 4G என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
நடிகை காயத்ரி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், என்னை சில தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு மெசேஜ் அனுப்பினார்கள். ஆனால் அதற்கு நான் எந்த பதிலையும் அனுப்பவில்லை. பதில் அளிக்கவில்லை என்றால் எனக்கு உடன்பாடில்லை என்பது புரிந்துவிடும் என்றும் நடிகை காயத்ரி கூறியுள்ளார்.
நடிகை காயத்ரி சுரேஷ் போன்றே இதற்கு முன்னர் சில மலையாள நடிகைகள் இதே போன்ற புகார்களை அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.