நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனைவி தீக்குளித்தார்! மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்!
2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் வண்டாரி தமிழ்மணி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடை அதிபராவார். இவருடைய மனைவியின் பெயர் ஜான்சிராணி. இத்தம்பதியினருக்கு பல ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தில் நிகழ்ந்து வந்த பிரச்சனைகள் காரணமாக ஜான்சிராணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மன அழுத்தத்தில் இருந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
அவரை ஒரு வழியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த தீக்காயங்களுடன் ஜான்சிராணி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
சம்பவத்தை அறிந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வண்டாரி தமிழ்மணியின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த சம்பவமானது திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.