தென்னிந்திய திரையுலகில் 100 படங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக பணியாற்றிய நாகேஸ்வரராவ் இறந்த செய்தியானது திரையுலகில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா இசை அமைப்பாளர் திடீர் மரணம்..! இளம் வயதில் உயிர் போன பரிதாபம்!

தென்னிந்திய திரையுலகில் பணியாற்றிவந்த முன்னணி இசையமைப்பாளர்களில் நாகேஷ்வர்ராவும் ஒருவர். இவருக்கு ஆதீஷ் என்று மற்றொரு பெயரும் உண்டு இவருடைய பாடல்களை கேட்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் அமைந்துள்ளது. ஒரு நடிகையின் வாக்குமூலம், மௌன மழை, தேள் அது திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார்.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரையுலகங்களில் இசையமைப்பாளராக வெற்றி வலம் வந்தார். இதனிடையே திடீரென்று நோய் வாய்ப்பட்டு போனார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல் நிலை மேலும் மோசமானது. நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இவருடைய சடலத்திற்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான தீனா, இசையமைப்பாளர் கண்மணியராஜா, பிரபல திரைப்பட இயக்குனர் ஆனந்த் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த செய்தியானது தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.