சூர்யா மனைவி ஜோதிகா மீது கமிஷ்னர் ஆபிசில் பகீர் கம்ப்ளைன்ட்! என்ன செய்தார் தெரியுமா?

பிரபல கோலிவுட் நடிகையான ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான ராட்சசி எனும் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட கோலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான ஜோதிகா தற்போது சீரான இடைவெளியில் படங்கள் செய்து வருகிறார். 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்கள் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் "ராட்சசி" என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் பிரமாண்ட வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் ஜோதிகா ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருப்பார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மெத்தனமாக செயல்படுவது போலவும், மாணவர்கள் மீது அக்கறையின்றியும், பயிலும் மாணவர்கள் சிகரெட் பிடிப்பது போலவும், ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்காததால் மாணவர்களால் பெரிய அளவில் முன்னேற இயலவில்லை என்றும் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோதிகா ஒரு வசனத்தில், "இந்த நாடு கெட்டு போறதே வாத்தியார்களாலதான்" என்று பேசியிருப்பார். 

தற்போது தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக பி.கே. இளமாறன் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். 

அதாவது, "ஜோதிகா" நடித்து வெளியாகியுள்ள "ராட்சசி" என்னும் திரைப்படத்தில் அரசுப் பள்ளியின் சூழல்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நன்றாக செயல்பட்டும் அவர் தவறாக தோற்றம் அளித்துள்ளார். இதனை ஆசிரியர் சங்கத்தினர் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் படத்தை தடை செய்ய வேண்டும் மற்றும் படக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சென்னை காவல்துறை ஆணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.