எப்படி இருந்த கீர்த்தி இப்டி ஆயிட்டாங்க! எதுவும் விபரீத நோயா? கவலையில் ரசிகர்கள்!

பிரபல கோலிவுட் நடிகையான கீர்த்தி சுரேஷ் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.


இவருடைய சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்து இவரின் ரசிகர் பட்டாளம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோலிவுட்டில் தற்போது பல நடிகைகள் உச்சத்தில் இருக்கின்றனர். இவர்களுடைய ரசிகர் பட்டாளம் இவர்களின் சின்ன சின்ன அசைவுகளையும் உற்று நோக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பெரிதும் கலாய்க்கப்படும் நடிகைகளுள் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவருடைய உடலை கொண்டு பல்வேறு நெட்டிசன்கள் இவரை கலாய்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் செல்வதற்காக அங்குள்ள நடிகைகளைப்போன்று தன் உடல் எடையை குறைக்க இவர் எண்ணி உள்ளார். அதன்படி நாளொன்றுக்கு பல மணி நேரம் ஜிம்மில் வொர்க்ஔட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு செய்து தன் உடல் எடையை நிறைய குறைத்துள்ளார். தற்போது எலும்பும் தோலுமாக அவர் மாறியுள்ளார்.

இதனைக் கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொழுக் மொழுக்கென்று இருந்தது கீர்த்தி சுரேஷா இப்படி?? என்ற எண்ணம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கம் போல சில நெட்டிசன்கள் இவரை கலாய்க்க தொடங்கியுள்ளனர். 

தற்போது விடுமுறையில் கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ரயில் நிலையத்தின் வாயிலில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படம் கீர்த்தி சுரேஷை கண்டுபிடிக்கவே பல மணி நேரம் ஆகும் போல் உள்ளது.

அவர் கொழுக் மொழுக் என்று இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருப்பார் என்று ரசிகர்கள் குமுறுகின்றனர். நன்றாக சாப்பிட்டு உடல் எடையை மீண்டும் அதிகரிக்குமாறு அவருடைய அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் கீர்த்திக்கு எதுவும் விபரீத நோய் வந்துவிட்டதா என்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.