வெளிநாட்டில் சமையல் வேலை செய்யும் பிரபல தமிழ் நடிகை..! ஆனால் நெகிழ வைக்கும் காரணம்! ஏன் தெரியுமா?

பிரபல முன்னாள் நடிகை தற்போது சமையல் கலைஞராக மாறியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


1990-களில் தென்றலே நெஞ்சை தொடு, விடிஞ்சா கல்யாணம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜெயஸ்ரீ. திருமணம் செய்து கொண்ட பின்னரும் சிறிது காலம் நடித்து வந்தார். பின்னர் திடீரென்று அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு தன்னார்வல நிறுவனங்களில் இணைந்து கொண்டு சமையல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். வணக்கம் மனநிறைவு கொடுப்பதால் இந்த பணிகளை செய்து வந்ததாக கூறியுள்ளார். இவரால், இவருடைய மகனும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்று சமையல் செய்து வருகிறார்.

இந்த செய்தியை அறிந்த அவர் காலத்தில் நடித்து வந்த நடிகைகள் பலரும் ஜெயஸ்ரீயை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளனர்.