கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் செயலா இது! வைரலாகும் சமந்தா வீடியோ! ஆனால் உண்மை என்ன தெரியுமா?

பிரபல கதாநாயகி கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் நடித்த பல திரைப்படங்கள் இருமொழிகளிலும் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும், இவருக்கு சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதன் காரணமாகவே அவருக்கு கிடைக்க வந்த 2 காதல் படங்களை அவர் நிராகரித்ததாக வதந்திகள் பரவின.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 100 கிலோ எடையுடைய பொருளை தூக்கி அவர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் இவ்வளவு அதிகமான எடையை ஏன் தூக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவானது சமந்தா ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.