கட்டு குலையா அழகு..! 50 வயதில் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை ஷோபா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல பரதநாட்டிய கலைஞர் 50 வயதில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.


தமிழ்நாட்டின் பிரபல பரதநாட்டிய கலைஞர்களில் ஒருவர் ஷோபனா. இவர் புகழ்பெற்ற நடிகையான பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மட்டுமின்றி 90-களில் கோலிவுட் திரையுலகில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த "தளபதி" திரைப்படத்தில் அவரை காதலித்து, பின்னர் வேறு வழியின்றி அரவிந்த்சாமியை திருமணம் செய்து கொள்ளும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி மலையாள திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவருடைய வயது 50. இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் 2011-ஆம் ஆண்டில் தன்னுடைய 41-வது வயதில், ஒரு சிறுமியை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார். 

இதற்கிடையே நாளிதழ் ஒன்று ஷோபனாவுக்கும் அவருடைய குடும்ப நண்பருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தியை வெளியிட்டது. மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் அவரை பற்றிய தகவல்கள் குறித்தும் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தற்போது வரை ஷோபனா இந்த செய்திக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத காரணத்தினால், நிச்சயமாக இவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக, ஷோபனாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 50 வயதில் திருமணம் அவசியம்தானா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.