இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவான் அடிபட்ட போதிலும் ஜிம்மில் பயிற்சி செய்வது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கையில் தான் காயம்! மன உறுதியில் இல்லை! ஜிம்முக்கு சென்று மாஸ் காட்டிய தவான்!

இந்திய அணி நாளை நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த ஷிகர் தவானின் கைவிரலில் அடிபட்டது. ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறைந்தபட்சம் சரியாவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஷிகர் தவான் ஜிம் ஒன்றில் பயிற்சி செய்வது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் தவானின் உடல்நிலை பற்றி கூறியுள்ளார்.
"தவானின் கைவிரல்கள் இரும்பு கவசத்தில் இருக்கும் என்றும் பூரண குணம் அடைவதற்கு 15 தினங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் மிகவும் தன்னம்பிக்கையான வீரர் என்பதால், அவரை எங்களுடன் வைத்துக் கொள்வோம். காயம் சரி ஆனால் உலக கோப்பை தொடரின் இரண்டாம் பாகத்தில் அவர் எங்களுக்காக நன்றாக விளையாட கூடும் அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றும் கூறினார்.
தவானின் உடல்தகுதியை நம்பியே இந்திய அணியின் உலகக்கோப்பை போக்கு அமைந்துள்ளது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.