டி20 உலக கோப்பை போட்டியில் தவானுக்கு இடம் அளிக்க கூடாது..! காரணம் சொல்லும் சீனியர் வீரர்! யார்? ஏன்?

நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் டி20 உலக கோப்பை போட்டிகளில் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பளிக்க மாட்டேன் என்று பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீச முடியாமல் கை விடப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வர்ணனையின் போது பேசிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் லோகேஷ் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வர்ணனையின் போது பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் இலங்கை அணிக்கு எதிராக எடுக்கும் ரன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. t20 உலக போட்டியில் ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் களமிறங்க வேண்டும். 


நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் டி20 உலக கோப்பையில் அணியில் தவானை சேர்க்க மாட்டேன் எனவும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.