பிரபல சின்னத்திரை தொகுப்பாளரை ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் பின் தொடர்ந்து சென்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னை ஓரின ஈர்ப்பாளராக அவன் நினைத்துவிட்டான்..! ஆண் டிவி தொகுப்பாளருக்கு நேர்ந்த சங்கடம்!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக தொகுப்பாளராக கலக்கி வருபவர் நடிகர் ரக்ஷன். இவருடைய பிரமாதமான தோற்றத்திற்கும், செய்யும் சேட்டைகளுக்கும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
விஜய் டிவியில் வெளிவந்த "சின்னதம்பி" என்னும் சீரியல் தொடரின் மூலம் அவர் மேலும் பிரபலமடைந்தார். அண்மையில் கேரள கதாநாயகனான துல்கர் சல்மான் நடித்துவந்த "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" எனும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகராகவும் மாறியுள்ளார்.
சமீபத்தில் அவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, ஓரினச் சேர்க்கையாளரால் தனக்கு நேர்ந்த சங்கடம் குறித்து தெரிவித்திருந்தார். அதாவது அவர் அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு நபர் இவரை வேறு மாதிரி நோட்டமிட்டு கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்த நபர் இவரை பின் தொடர்ந்து வந்ததாகவும், அப்போது இவர் பெரிதும் பயந்து போனார் என்றும் கூறினார். அப்போதுதான் ஆண்கள் பெண்களை துரத்தும்போது எவ்வாறு பயப்படுகின்றனர் என்பதை அறிந்து கொண்டதாக மனம் திறந்தார்.
இந்த நிகழ்வானது அங்கு சில நிமிடங்களுக்கு ரக்ஷனுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகாது.