அந்த 2 பேர்..! என்னிடமும் என் மகளிடமும் ஆண் உறுப்பை காட்டினார்கள்..! பகீர் அனுபவம் பகிரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ..!

சின்னத்திரை பிரபலம் ஒருவர் சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பல தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல்வேறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரலாகவும் அமைத்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

தன்னுடைய வாழ்வில் தனக்கு நேர்ந்த மிகவும் கசப்பான சம்பவங்கள் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது தான் சிறுமியாக இருந்தபோது, அப்பா ஸ்தானத்தில் இருந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆடையை கழட்டி அந்தரங்க உறுப்பை வெளிக்காட்டி கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அந்த வயதில் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது தெரியவில்லை என்றும், காலம் செல்ல செல்ல அந்த நோக்கத்தை உணர்ந்த நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இத்தனை நாட்கள் இந்த சம்பவத்தை மனதினுள் பூட்டி வைத்திருந்தாக கூறியுள்ளார்.

தனக்கே இப்படிப்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் போது, சாதாரண பெண்களுக்கு இதைவிட அதிகமான கொடுமைகள் உருவாகும் என்பது எந்தவித ஐயமுமில்லை என்று கதறுகிறார். அதுமட்டுமின்றி இவருடைய மகள் ஒரு முறை லிப்டில் சென்றுகொண்டிருந்தபோது அந்தரங்க உறுப்பை காண்பித்து மர்ம நபர் ஒருவர் செயலை செய்துள்ளார்.

பயந்துபோன சிறுமி ஓடி வந்து லட்சுமிராமகிருஷ்ணனிடம் நிகழ்ந்ததை கூறியுள்ளார். அவர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போதிலும் அந்த மனிதனின் முகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இறுதியாக அவர் கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து பெண்களின் வாழ்விலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அரங்கேறுகின்றன இதிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்" என்று மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.