500 படங்களில் நடித்தும் அரசு மருத்துவமனையில் பறிபோன உயிர்! குள்ளமணி மரணித்தது எப்படி?

பிரபல காமெடி நடிகர் குள்ளமணி பரிதாபமான முறையில் இறந்த கதையானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


1980-களில் குள்ளமணி என்ற பிரபல நடிகர் சினிமாவில் நடித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ராணி. இவருடைய இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்ஸ்டார், உலக நாயகன் ஆகியோருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்களுக்கான சம்பளத்தை கொடுக்காமல் இருப்பதாக கதை வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இவருக்கு ஒரு கிட்னி செயலிழந்து போனது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இவரை நடிகர் சரத்குமார் மட்டுமே நேரில் சந்தித்தார்.

அதன் பின்னர் அனாதையாக நோய்வாய்ப்பட்டு அதே மருத்துவமனையில் உயிரிழந்தார். 5 படங்களில் மட்டுமே நடித்து மிகப்பெரிய ஆளாகும் காலத்தில், 500 படங்களுக்கு மேல் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அனாதையாக இறந்துபோன குள்ளமணியின் வரலாறு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.