டிவி தொடரான கலைஞர் வாழ்க்கை வரலாறு..! எந்த சேனல்? எப்போது முதல் தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை பயணம் தொலைக்காட்சி தொடராக தொடங்கியுள்ளது.


திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை "நெஞ்சுக்கு நீதி" என்ற சுயசரிதையாக வெளியிட்டார். இந்த நூலின் 6 பாகங்களை இதுவரை அவர் வெளியிட்டுள்ளார்.  தன்னுடைய குழந்தை பருவத்தில் தொடங்கி அரசியலில் கடந்து வந்த பாதை வரை அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தற்போது "நெஞ்சுக்கு நீதி" புத்தகமானது தொலைக்காட்சி தொடராக இன்று முதல் வரவுள்ளது. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்றிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் இந்த நிகழ்ச்சியானது ஒளிப்பரபாக திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.