பிகில் வெற்றியா? தோல்வியா? விஜய் - அட்லி ஜாதகம் மூலம் வைரல் ஜோதிடர் வெளியிட்ட ஷார்ப் கணிப்பு..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்று பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிகில் திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் பிகில் திரைப்படத்தின் ரிசல்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் எனவும் , வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் எனவும் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிகில் திரைப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இதனை நடிகர் விஜய், நயன்தாரா ,ஏ ஆர் ரகுமான், இயக்குனர் அட்லி இவர்களின் ஜாதகத்தை வைத்து கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார் .