கொரோனா வைரஸ் எப்போது குறையும்? உலகப்புகழ் வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடரின் கணிப்பு..! என்ன தெரியுமா?

அடுத்த மாதம் 13-ஆம் தேதி முதல் இந்த வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறையும் என்று பிரபல நாடி ஜோதிடர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நாகை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே வைதீஸ்வரன் கோவில் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்குள் தையல்நாயகி அம்மாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் என்ற திருக்கோவில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் செல்வ முத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் வழங்கப்படுகின்ற பிரசாதம் 4,448 நோய்ளை தீர்க்கும் வல்லமை உடையது என்று கூறப்படுகிறது.

மேலும், இங்கு பார்க்கப்படும் நாடிஜோதிடம் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். திருமணம், தேர்தல் கூட்டணி, தொழில் ஆகியன பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு நாடி ஜோதிடம் பார்த்து கூறப்படும்.

இந்நிலையில் உலகை ஆட்டிப்படைத்து வரும் இந்த வைரஸ் தாக்குதல் எப்பொழுது தீரும் என்று பிரபல நாடி ஜோதிடர் சிவகாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை, மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் கூறினார்.

இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கழிவுகளாலுமே இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்ததாகவும் கூறினார். இந்த வைரஸ் தாக்குதலினால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார். இந்த ஆபத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கு வீட்டையும் நாட்டையும் சுத்தமாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இவருடைய நாடிகணிப்பானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது‌.