பிரபல நடிகையின் தந்தை மறைந்திருப்பது கோலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நிகழ்ந்த திடீர் துயரம்..! அதிர்ச்சியில் உறைந்துள்ள நடிகை அமலா பால்..! என்னாச்சு தெரியுமா?
கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை அமலா பால். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கிய "மைனா" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அமலாபால் அறிமுகமானார். இந்தப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது.
தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் "தெய்வத்திருமகள்" திரைப்படத்தில் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார். இளையதளபதி விஜய்யுடன் நடித்து வெளிவந்த "தலைவா" திரைப்படமும், நடிகர் தனுஷுடன் நடித்து வெளிவந்த "வேலையில்லா பட்டதாரி 1&2" படங்களும் இவருடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன. தற்போது இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இவருடைய தந்தையின் பெயர் பால் வர்கீஸ். உடல்நல குறைபாடு காரணமாக இவர் நேற்று காலமானார். கோலிவுட் திரையுலகம் பெரிதளவில் வருத்தமடைய செய்துள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் கேரளா மாநிலத்திலுள்ள இவரது சொந்த ஊரான குருப்பம்படியில் இன்று நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.