பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன்! அவரசமாக மருத்துவமனையில் அட்மிட் ஆன காதலி! அதிர வைக்கும் காரணம்!

சனம் ஷெட்டிக்கு திடீரென்று அறுவை சிகிச்சை செய்யப்படப்போகும் செய்தியானது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் வீட்டில் நேற்று வெளியேற்றப்பட்ட தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி. இவர் சினிமா நடிகையும், மாடலிங் நடிகையும் ஆவார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஃபாலோயர்கள் உள்ளனர். நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு சனம் ஷெட்டி கடுமையான ஆட்சேபனை கூறியிருந்தார்.

இதற்கு தர்ஷனின் ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் சிறிய கட்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது தற்போது அபாயகரமாக மாறியிருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யபட உள்ளது. எனக்காக இறைவனை வேண்டி கொள்ளுங்கள் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

விரைவில் குணமடையுமாறு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவானது இன்ஸ்டாகிராமில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விரைவில் கட்டியை அகற்ற ஆப்பரேசன் நடைபெற உள்ளது.