பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தன்னுடைய 3-வது கணவரை சமூக வலைத்தளங்களில் அறிமுகப்படுத்திய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய 3வது கணவன் இவர் தான்..! பிக்பாஸ் ரேஷ்மா சற்று முன் வெளியிட்ட புகைப்படம்! யார் தெரியுமா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் "புஷ்பா" என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுளேட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய புகழ்பெற்ற பிக்பாஸ் சீசன் 3-ல் ரேஷ்மா போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீடு தன்னுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி மனம் திறந்து ரேஷ்மா பசுபுலேட்டி பேசினார். அதாவது முதலில் இவருக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அந்த திருமணம் மிகவும் விரைவாக விவாகரத்தில் முடிந்தது.
சோகத்தை மறப்பதற்காக இவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இவர் ஒரு இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது அனைவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக பிக்பாஸ் வீட்டில் கூறி அழுதுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இவருக்கும் நிஷாந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பறந்துக்கொண்டிருந்தன. ஆனால் வழக்கம்போல ரேஷ்மா இவை அனைத்தையும் மறுத்தார்.
இதனிடையே சமூகவலைதளத்தில் இவர் நிஷாந்த் என் காதலன் இல்லை என்று வெளிப்படையாக சில நாட்களுக்கு முன்னர் கூறிவந்தார். ஆனால் அதிசயமாக தற்போது அதே நிஷாந்த்தை "ஐ லவ் யூ" என்று சமூகவலைத்தளங்களில் கூறியுள்ளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் பலர் அவரை வெறித்தனமாக கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.