இளையதளபதி நடிகர் விஜய் குறித்து முன்னாள் கோலிவுட் கதாநாயகி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட வந்தார்.. ஆனால்..? நடிகர் விஜயின் பழைய வீடியோவை லீக் செய்த நடிகை கிரண்..! கொதிக்கும் ரசிகர்கள்! காரணம் உள்ளே!
2001-ஆம் ஆண்டில் நடிகர் சியான் விக்ரமுடன் "ஜெமினி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கோலிவுட் திரையுலகில் நடிகை கிரண் ரத்தோட் அறிமுகமானார். அறிமுகமான திரைப்படத்திலேயே தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் பல பிரமாண்ட வெற்றி திரைப்படங்களான அன்பே சிவம், வின்னர், வில்லன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த காரணத்தினால் தமிழ்பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கவில்லை. கோலிவுட் திரையுலகில் கடைசியாக அவர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய "முத்தன கத்திரிக்காய்" என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் இளைய தளபதி விஜய் உடன் நடனமாடுகின்ற ஒரு பாடலை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது, "யாரையும் இதுபோன்று தொடாதீர்கள். நெருங்கி பழகாதீர்கள். சமூக விலகலை கடைபிடியுங்கள்" என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.