அதான் விவாகரத்து பண்ணிட்டனே..! பொது இடத்தில் பலர் முன்னிலையில் ஆணுடன் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட நடிகை!

பிரபல கதாநாயகி தன்னுடைய ரசிகருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை அமலா பால். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கிய "மைனா" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அமலாபால் அறிமுகமானார். இந்தப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. 

தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் "தெய்வத்திருமகள்" திரைப்படத்தில் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.  இளையதளபதி விஜய்யுடன் நடித்து வெளிவந்த "தலைவா" திரைப்படமும், நடிகர் தனுஷுடன் நடித்து வெளிவந்த "வேலையில்லா பட்டதாரி 1&2" படங்களும் இவருடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன. தற்போது இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் பிரிந்தனர். இயக்குனர் விஜய் 2-வது திருமணம் செய்து கொண்டார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை அமலாபால் இரவு நேர பார்ட்டிகள் செல்வது, ஆண் நண்பர்களுடன் கூத்தடிப்பது என்று தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்து வருகிறார்.

இந்நிலையில் பொது இடமென்றும் பாராமல் தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு நடிகை அமலாபால் முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட ரசிகர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவை பார்க்கவும் நெட்டிசன்கள் அமலாபாலின் இந்த செயலை முற்றிலுமாக கண்டித்து வருகின்றனர்.