ரஞ்சித்துடன் ஜோடியாக சென்று தினகரனை சந்தித்த பிரபல நடிகை! என்ன காரணம் தெரியுமா?

பிரபல குணச்சித்திர நடிகை வினோதினி அமமுகவில் இணைந்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


நடிகை வினோதினி திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் புகழ்பெற்ற குணசித்திர நடிகையாவார். முதன் முதலில் இயக்குனர் விசுவின் இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நடித்த "மணக்கயிறு" என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். முதன் முதலாக இவர் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக "வண்ண வண்ண பூக்கள்" என்னும் படத்தில்  ஜோடியாக நடித்தார். 

நெடுங்காலமாக திரைப்படத்துறையில் இருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக சோபிக்க இயலவில்லை. இந்நிலையில் இவர் சின்னத்திரையில் நடிக்க வந்தார். பல முன்னணி சீரியல்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இது 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 15-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் இவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியில் இணைந்துள்ளார். இணைப்பின் போது பாமகவில் இருந்து வெளியேறி அமமுகவில் இணைந்த நடிகர் ரஞ்சித் உடனிருந்தார்.

இணைப்புக்கூறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.