முதலில் அப்பா..! இப்போது மகன்..! இளம் நடிகை எடுத்த துணிச்சல் முடிவு! யார், என்ன தெரியுமா?

6 வருடங்களுக்கு முன்னால் தந்தையுடன் நடித்த கதாநாயகி, தற்போது அவருடைய மகனுடன் நடிக்கவிருப்பது திரையுலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். கோலிவுட் திரையுலகிலும் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இன்று நேற்று நாளை, அமரகாவியம் ஆகிய திரைப்படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அடுத்த படத்தில் பிரபல ஜாம்பவானான நடிகர் ஜெயராமின் மகனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பாற்றலை நடிகை மியா ஜார்ஜ் செம்மையாக வெளிப்படுத்தி வருகிறார். அடுத்த படத்தின் பூஜையானது நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மற்றொரு சுவாரசியமான செய்தியும் உலா வருகிறது. அதாவது மியா ஜார்ஜ், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ஜெயராம் உடன் "சலாம் காஷ்மீர்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை மற்றும் மகனுக்கு ஜோடியாக நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.