பிரபல இயக்குனருக்கு 2ம் தாரமாகும் பிரபல நடிகை அனுஷ்கா? பரபர தகவல் உள்ளே!

திருமணத்துக்கு தகுதியான மணமகன் கிடைக்காமல் பிரபல நடிகையொருவர் அல்லாடி வரும் செய்தியானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல வருடங்களாக கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா. நடிகர்களை போன்று நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திரைப்படங்களில் முதன்முதலில் நடிக்க தொடங்கியவர் நடிகை அனுஷ்கா தான் கூறினால் அது மிகையாகாது. 

அவர் நடித்த "அருந்ததி" திரைப்படம் வெற்றி பெற்றது யாராலும் மறுக்க இயலாது. திரைப்படத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் அவர் என்றும் கவலைப்பட்டது இல்லை. உதாரணமாக "இஞ்சி இடுப்பழகி" என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக, உடல் எடையை அதிகரித்தார். 

படம் சரிவர ஓடவில்லை என்றாலும், அனுஷ்காவால் மீண்டும் பழைய உடலை கொண்டுவர இயலவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவருடைய உடல் எடை கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தன. உடல் எடையை குறைக்க இயலாமலும், பட வாய்ப்புகளை அதிகரிக்க இயலாமலும் அனுஷ்கா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அவற்றினால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். தற்போது அவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு 2-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் இயக்குனரான பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்து கொள்ள போகிறார். இதில் இந்த இயக்குனர் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.