தட்டில் நெளிந்த புழுக்கள்! பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் நடிகை நிலாவுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான மீரா சோப்ராவின் உனவில் புழுக்கள் இருந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல புதுமுக பாலிவுட் நடிகைகளில் மீரா சோப்ராவும் ஒருவர். இவர் உலகப் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கோலிவுட்டிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மருதமலை, அன்பே ஆருயிரே ஆகியன இவர் நடித்த கோலிவுட் படங்களில் சில. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் சென்ற இவர் சமீபத்தில் வெளியான "செக்ஷன் 375" என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் சில நாட்களுக்கு முன்னர் ஆமதாபாத் நகரிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அங்கு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவாறு உணவிலிருந்து புழுக்கள் வெளியே வந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீரா, சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

அந்த வீடியோவில், "நட்சத்திர ஹோட்டல்களில் பெருமளவிற்கு பணத்தை கொடுத்து புழுக்களை உணண்வா தங்கியுள்ளோம்?? இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. அனைவரும் இதனை ட்ரெண்ட் செய்வோம்" என்று பதிவிட்டிருந்தார்.

அவர் கூறியவாறு நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்ரென்டிங்காக மாற்றியுள்ளனர்.