அரைகுறை ஆடையுடன் ரசிகர்களிடம் சிக்கிய நடிகை! உடன் வந்த நடிகர் செயல்!

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப். இவரும் சமீபத்தில் பாலிவுட்டை கலக்க வரும் நடிகையான திஷா பட்டாணியும் மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஒரு உணவகத்தில் இருந்து ஒன்றாக வெளிவந்த காட்சி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


டைகர் ஷ்ராஃப் முன்னணி பாலிவுட் கதாநாயகர்களுள் ஒருவராவார். இவர் நடித்துள்ள சில படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் பிரபல நடிகையான திஷா பட்டாணியும் சில காலங்களாக நெருங்கி பழகி வருகின்றனர்.

எப்பேற்ப்பட்ட சூழல் இருந்தாலும், இருவரும் ஒன்றாக சென்று ஞாயிற்றுக்கிழமையில் உணவருந்துவதை கைவிடுவதில்லை. இதுபோன்ற நல்ல பழக்கங்களை இருவரும் கொண்டுள்ளனர். அவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஒன்றாக ஓர் உணவகத்தில் இருந்து வெளியேறினர். ரசிகர்கள் கூட்டம் இவர்களைக் கண்டவுடன் அலைமோதியது.

உடனே டைகர் திஷா பட்டாணியை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் பிங்க்வில்லா (Pink Villa) என்ற வலைத்தளத்தில் இருவரின் உறவைப்பற்றி திஷா பட்டாணியிடம் கேட்டபோது "டைகர் ரொம்ப பொறுமையானவர்.

இருவரில் யாராவது ஒருவர் சீக்கிரம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். நான் தயாராக உள்ளதாக கூறிவிட்டேன். டைகர் சற்று தயங்குகிறார்" என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

திஷா பட்டாணி சமீபத்தில் நடித்த பாரத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டைகர் தன்னுடைய அடுத்த படத்தில் ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு நடனப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.