அவங்க நடத்தையால் எனது பெயர் கெடுகிறது! தேவதையை கண்டேன் சீரியலுக்கு குட்பை சொன்ன ஸ்ரீ! காரணம் அவங்க கள்ளக்காதல்?

தேவதையை கண்டேன் சீரியலிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து பிரபல நடிகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் என்பது யாரும் அறியாத செய்தி. 

தந்தையின் பெயரை உபயோகப்படுத்தாமல் தன்னுடைய சொந்த உழைப்பினால் முன்னேற்றம் அடையும் வகையில் யாரும் மறுக்க இயலாது. வெள்ளித்திரையிலும் தெறி,ரங்கூன் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "தேவதையை கண்டேன்" மற்றும் "யாரடி நீ மோகினி" ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று ஒரு தேவதையை கண்டேன் சீரியல் தொடரிலிருந்து விலகினார். இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "தேவதையை கண்டேன் சீரியல் தொடரில் என்னுடைய கதாபாத்திரம் தொடக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சீரியல் ஏற்கனவே தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது பலரும் எனக்கு மனதார வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் என்னுடைய கதாபாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனக்கு சற்று பிடிக்காமல் போக தொடங்கியது. இருப்பினும் சானல் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக நான் நடித்து வந்தேன். மற்றவர்களுக்காக என்னுடைய கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. 

அப்போது "யாரடி நீ மோகினி" சீரியல் குழுவினர் என்னுடைய கதாபாத்திரத்திற்காக "தேவதையை கண்டேன்" சீரியல் நிர்வாகத்திடம் அவகாசம் கேட்டனர். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சானல் நிர்வாகம் என்னை அழைத்து "தேவதையை கண்டேன்" சீரியலிலிருந்து விலகி கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆதலால் விலகி கொண்டேன்" என்று கூறினார்.

இந்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.