பிரபல கோலிவுட் கதாநாயகி நடிகர் ஒருவர் கூறிய காதலை நிராகரித்துள்ள சம்பவமானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் அவரை காதலிக்கிறேன்..! காதலை சொன்ன பிரபல ஹீரோவை டீலில் விட்ட கீர்த்தி சுரேஷ்! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!
தென்னிந்திய திரையுலகில் திகழ்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் "நடிகையர் திலகம்" என்ற திரைப்படத்தில் சாவித்திரி ஆகவே வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் "பைரவா" என்ற திரைப்படத்தில் இளையதளபதி விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையான "அண்ணாத்த" என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் "மிஸ் இந்தியா", பாலிவுட் திரையுலகில் "ரங்க் தே" என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் ஒருவரை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த வதந்திக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு நிகழ்வை தெரிவிக்க, அது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷ் யாரோ ஒருவரை காதலித்து வருவதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியிருப்பதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அந்த பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷிடம் தன்னுடைய காதலை கூறியதாகவும், அதற்காக தான் வேறொருவரைக் காதலிப்பதாக கூறி, அந்த நடிகரின் காதலை நிராகரித்து விட்டதாகவும் சித்ராலட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.