நடிகையுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் நடிகர்..! தீயாய் பரவிய வீடியோ..! விவாகரத்திற்கு இது தான் காரணமா?

மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பிரபல நடிகர் மற்றொரு நடிகையுடன் படுக்கையறையில் இருந்த வீடியோ வெளியாகியுள்ளது வைரலாகி வருகிறது.


பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் நடிகர் நவாஸுதின் சிதிக்கி. வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து மிகப்பெரிய பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான "பேட்ட" திரைப்படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களிடையே மதிப்பு பெற்றார்.

இந்நிலையில் இவருடைய மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய மனைவியின் பெயர் ஆலியா. சில நாட்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி ட்விட்டரில் இணைந்த அவர் தன்னுடைய கணவர் குடும்பத்தினர் குறித்து பல பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கப்போவதாக விறுவிறுப்பு ஏற்படுத்தினார். நவாஸ் சித்திகி ஆலியாவை 2009-ஆம் ஆண்டில் 2-வது திருமணம் செய்து கொண்டார். 

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாளிலிருந்து இருவருக்கும் பிரச்சினை இருப்பதாக சமூகவலைதளங்களில் ஆலியா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தான் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வருவதாக கூறியுள்ளார். விவரிக்க முடியாத அளவிற்கு நவாஸ் குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்ததாக ஆலியா கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி வேறு ஒரு ஆண்மகனை காப்பாற்றுவதற்காக, எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நவாஸ் குடும்பத்தினர் கதை கட்டினர். அதையெல்லாம் தான் பொறுத்து கொண்டதாகவும் ஆலியா கூறியுள்ளார். ஆனால் இதுவரை விவாகரத்து குறித்து நவாஸுதீன் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர்கள் நவாஸுதீன் வேறொரு நடிகையுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதாவது 2018-ஆம் ஆண்டில் வெப்சீரிஸில் வெளியான "சேக்ரட் கேம்ஸ்" என்ற தொடரில் படுக்கையறை காட்சிகள் நடிகையுடன் அதிக நெருக்கத்துடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம் தான் தற்போது கணவன் மனைவியிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் விவாகரத்து செய்தியானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.