ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம்! ஆனால் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி! போலீஸ் ஸ்டேசன் சென்ற ஜெயம்ரவி பஞ்சாயத்து!

சம்பள பணத்தை சரியாக தராததால் பிரபல நடிகரின் மேனேஜர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோலிவுட்டில் பிரபல நடிகர்களுள் நடிகர் ஜெயம் ரவியும் ஒருவர். இவருடைய பாதுகாப்பிற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள "டாப் கார்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி டவர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பாதுகாப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு துப்பாக்கி ஏந்திய 2 வீரர்களை மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அனுப்ப அந்த நிறுவனம் சம்மதித்தது. ஜெயம்ரவியின் நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று 2 பாதுகாப்பு அதிகாரிகளின் வேலையையும் ஜெயம் ரவி ரத்து செய்துவிட்டார். 

கடந்த 4 மாதங்களாக இருவருக்கும் ஜெயம் ரவி இன்னும் சம்பள பாக்கியை திருப்பி தரவில்லை. பொறுத்து பார்த்துக்கொண்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனமானது நேற்று அதன் மேலாளர் ஆன வின்சென்ட் என்பவர் மூலம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

புகாரை பெற்றுக்கொண்ட  காவல்துறையினர் ஜெயம்ரவியின் மேலாளரான சேஷகிரி என்பவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளது.

ஒரு படத்திற்கு ஜெயம் ரவி பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.