அப்பா இல்லை..! அம்மா கூலி வேலை..! ஆனால்..! மாணவி கூறியதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா..!

சென்னையில் நடைபெற்ற "அகரம்" நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அழுத சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக "அகரம்" என்ற சமுதாய அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் விழாவன்று சென்னை தியாகராய நகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்திருந்தார். இந்த விழாவில் எழுத்தாளர் மாடசாமி எழுதிய "வித்தியாசம்தான் அழகு" என்ற நூல் வெளியிடப்பட்டது. "உலகம் பிறந்தது நமக்காக" என்ற பயிற்சி கையேட்டை செங்கோட்டையன் வெளியிட்டார்.

இந்த விழாவில் நகரத்தின் மூலம் படித்து வேலைவாய்ப்பு பெற்ற மாணவி ஒருவர் தன்னுடைய கஷ்டத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார்.  அந்த மாணவியின் தந்தை புற்றுநோயால் இறந்தார் என்றும், தாயாரின் ஒருநாள் தினக்கூலியின் மூலம் அகரம் அமைப்பின் உதவியோடு படித்து வந்துள்ளார். அகரம் அமைப்பின் மூலமே வேலைவாய்ப்பும் பெற்றுள்ளார். இவருடைய கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து கொண்டபோது சூர்யா, செங்கோட்டையன் உட்பட அனைவரும் கண்கலங்கினர்.

பின்னர் நடிகர் சூர்யா எழுந்து சென்ற அந்த மாணவியை அரவணைத்து ஆறுதல்படுத்தினார். இந்த சம்பவமானது அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர செய்தது. இந்த விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் நாகராஜ் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரான மரியா ஜான்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.