கொரோனா மருந்து! சந்தேகம் இருந்தால் சாப்பிட்டு பாருங்கள்..! தணிகாசலம் சவாலும்..! நள்ளிரவு கைதும்..!

தன்னிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து இருப்பதாக வீடியோக்கள் வெளியிட்டுவந்த சித்தமருத்துவர் தணிகாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,64,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 38,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 52,952 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 15,257 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,783 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 4-வது இடம் வகிக்கிறது. 4,829 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலின் பாதிப்பை குறைப்பதற்காக மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் மே-17 வரை நாடு முழுவதிலும் 54 நாட்கள் பல்வேறு கட்டங்களில் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவரான திருத்தணிகாசலம் தன்னிடம் இந்த வைரஸ் தாக்குதலுக்கு வழங்கியிருப்பதாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். இவர் சென்னை அரும்பாக்கத்தில் "ரத்னா" என்ற பெயரில் சித்த மருத்துவமனை அமைத்துள்ளார். ஆனால் இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகவும், ஒப்புதல் அளித்தால் தன்னுடைய மருந்தானது பெரும்பாலானோரை பிழைக்க செய்துவிடும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.

அவர் நோய்க்கு எதிராக மருந்து கண்டு பிடித்ததாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது இந்திய மருத்துவம் சம்மேளனம், ஓமியோபதித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோரைளை அதிர்ச்சியடைய செய்தது. பின்னர் இந்திய மருத்துவ சம்மேளனம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனரான கணேசன் தணிகாச்சலம் மீது போலி சான்றிதழ்கள் கொண்டு மருத்துவம் பயின்று வந்ததாக புகார் அளித்தார். அப்போது தணிகாச்சலம் "என்னுடைய மருந்து குணப்படுத்தவில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள்" என்று சவால் விடும் முறையில் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவர் ஒருவரையும் காப்பாற்றியதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தனிகாச்சலத்தை தேட தொடங்கினர். தனானை காவல்துறையினர் தேடுவதை அறிந்த தணிகாச்சலம் உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை நீக்கிவிட்டார். பின்னர் தலைமறைவானார். காவல்துறையினர் தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தணிகாச்சலம் பெரியகுளத்தில் பதுங்கியிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். 

5 பிரிவுகளின் கீழ் தணிகாச்சலம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.