தன்னைவிட வயது குறைவான இளைஞருடன் உறவு..! தாயின் செயலை அறிந்து நெய்மார் செய்த நெகிழ்ச்சி செயல்!

பிரபல கால்பந்து வீரரின் தாயாரை அவருடைய ரசிகர் காதலிக்கும் சம்பவமானது ஃபுட்பால் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஃபுட்பால் உலகில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த தலை சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவர் நெய்மார். இவர் சர்வதேச அளவில் பிரேசில் நாட்டிற்கும், கிளப் லெவலில் "பாரிஸ் செயிண்ட் ஜெர்மன்" ஆகிய அணிகளுக்கு விளையாடி வருகிறார். இவர் முன்னாள் பார்சிலோனா வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக இணையதளத்தில் நெய்மாரின் தீவிர ரசிகருக்கும், அவருடைய தாயாருக்கும் ஏதேனும் உறவிருப்பது போன்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த செய்திகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவ்விருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதோ ஃபுட்பால் உலகில் மட்டும் என்று நெய்மார் குடும்பத்திலும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் பலரும் நெய்மாரை கிண்டலடித்த வண்ணம் இருந்தனர். அந்த புகைப்படத்தையே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நெய்மார் பதிவேற்றம் செய்து, "மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2016ஆம் ஆண்டில் நெய்மரின் தந்தையான வாக்னர் ரிபேய்ரே மற்றும் தாயான நடின் கான்கேல்வ்ஸ்(52) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போதிலிருந்து நெய்மாரின் தாயார், 22 வயதேயான நெய்மாரின்  தீவிர ரசிகரான இளைஞரை காதலித்து வந்துள்ளார். தற்போதும் வாக்னர் நெய்மாரின் மேலாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.