திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா கணவன் விக்னேஷ் சிவனுடன் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாலையும் கழுத்துமாக திருப்பதியில் நயன்தாரா! கூடவே விக்னேஷ் சிவன்! என்னவா இருக்கும்?
கோலிவுட் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பல மாதங்களுக்கு முன்னர் காதல் மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்கள் வைரலாயின. இந்நிலையில் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தமும், அடுத்தாண்டு தொடக்கத்தில் திருமணமும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இருவருக்கும் வேத பண்டிதர்கள் ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து பிரசாதங்களை வழங்கினர். அப்போது இருவரும் மாலையும் கழுத்துமாக இருந்தனர். மேலும் வேத மந்திரங்களை ஓதி பண்டிதர்கள் இருவருக்கும் ஆசிர்வாதம் செய்தனர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்தபோது ரசிகர்கள் நயன்தாராவை சூழ்ந்துகொண்டனர். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் முறையிட்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நயன்தாரா அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
அதன்பின்னர் அவர் காரில் ஏறி சென்றார். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.