பிரபல கோலிவுட் நடிகையான சமந்தா பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து இருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.
நள்ளிரவு! கும் இருட்டு! கணவனுக்காக நடையாய் நடந்த சமந்தா! ஏன் தெரியுமா?

கோலிவுட்டில் பல்வேறு வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சமந்தா. இவர் நடித்த தெறி, அஞ்சான் ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்தன. இவர் சமீபத்தில் நடித்த "ஓ பேபி" என்னும் படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.
பிரபல டோலிவுட் ஜாம்பவானான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் நடிக்கும் பாக்கியம் சமந்தாவிற்கு கிடைத்துள்ளது. இவருடைய படங்கள் வெற்றி அடைவதற்காக சில தினங்களுக்கு முன்னர் திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்தார்.
அவ்வாறு அலிபிரி மலைப்பாதையின் வழியே நடைப்பாதை வழியாக சென்றுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் நடைபயணம் வந்தனர். இரவு திருமலையில் தங்கிய சமந்தா, காலையில் பெருமாளை தரிசித்த பின்னர் சென்னை திரும்பினார். கணவனின் நீண்ட ஆயுளுக்காக நடை பயணமாக வந்ததாக சமந்தா கூறினார்.