பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை மணமுடித்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபல இளம் கிரிக்கெட் வீரருக்கு திடீர் கல்யாணம்! பொன்னு யார் தெரியுமா?

தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய வீரரான கருண் நாயர் பெற்றார். ஆனால் அதன் பின்னர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை தடம் மாறிப்போனது.
இவர் தன்னுடைய நீண்டநாள் தோழியான சனயா டங்கரிவாலா என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் ஒப்புக்கொண்டு சென்ற ஆண்டு ஜுன் மாதத்தில் நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை கருண் நாயர் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள உதய்பூர் என்ற இடத்தில் இவருடைய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய முண்ணனி கிரிக்கெட் வீரர்கள் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்களை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.