அரசை விமர்சிக்க பயமாக உள்ளது! அமித்ஷா முன்பு பேசிய பிரபல தொழிலதிபர்!

தற்போது உள்ள சூழ்நிலையில் அரசை விமர்சிக்க அனைவரும் பயப்படுகிறார்கள் என பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.


டெல்லியில் தனியார் பத்திரிகை ஒன்றில் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் அவர்கள், மத்திய அரசு நன்றாக பணியாற்றி வருகிறது. எனினும் அரசை விமர்சிக்கும் தைரியம் அவருக்கும் இல்லை. இதனை யாரும் வெளிப்படையாக கூறவும் முன்வரவில்லை. ஆனால் நான் இதை வெளிப்படையாக கூறுகிறேன். சில

 தொழிலதிபர்களை அரசுக்கு பயந்து புதிய முதலீடுகளை தொடங்காமல் உள்ளனர். இதனால் மத்திய அரசு மற்றவர்கள் கூறும் விமர்சனங்களில் உண்மை தன்மையை அறிந்து செயல்படும் வேண்டும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.