ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மான்னு தெரிஞ்சும் ராத்திரி வரச் சொல்லுவாங்க..! அனுபவம் பகிரும் சீனியர் நடிகை!

திரைஉலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை நானும் எதிர் கொண்டேன் என பிரபல பிக்பாஸ் நடிகை மனம் திறந்துள்ளார்.


திரையுலகில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது என்று காலம்காலமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீ டூ என்ற புகார் எழுந்து வந்தது. இதன் மூலம் பல்வேறு பிரபலங்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கிலும் பல்வேறு பிரபலங்கள் தங்களுக்கு திரையுலகில் நேர்ந்த பாலியல் பிரச்சினைகளை பற்றி கூறி வருகின்றனர். 

பிரபல பாலிவுட் நடிகை காஷ்மீரா ஷா தமிழில் ஷாம் நடித்த அகம் புறம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.இவர் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்த இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை காஷ்மிரா ஷா தாமும் பட வாய்ப்புக்காக படுக்கையை அழைக்கும் சம்பவத்தை எதிர் கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் , ஒவ்வொரு சினிமா துறையிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். இயக்குனரும் தயாரிப்பாளர்களும் என்னுடைய திறமையை மட்டுமே நம்பினார்கள். ஆஷிஸ் மிர்சா, ராம்கோபால் வர்மா ,மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற புகழ்வாய்ந்த இயக்குனர்களுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையால் என் சினிமா வாழ்க்கை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் அவர் கூறினார்.