விராட் கோலியுடன் ஓவர் நெருக்கம்! பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்!

புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஊர்வசி ரௌத்தேலா இங்கிலாந்து நாட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் நிறுவப்பட்ட விராத் கோலியின் மெழுகுச் சிலையை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை புரொமோட் செய்யும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

அவ்வகையில் ஒன்றானது, "விராத் கோலியின் மெழுகு சிலை". இந்த சிலையானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌத்தேலா உலகக்கோப்பை போட்டிகளை காண்பதற்கு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த விராத் கோலியின் மெழுகு சிலையை கட்டியணைத்தவாறு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அப்லோடும் செய்துள்ளார்.

இது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் விராத் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவை உள்ளிழுத்தனர். அதாவது அனுஷ்கா ஷர்மா பொறாமை படுவதாகவும், அவர் வயிறெரிந்து கொண்டிருப்பதாகவும் கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். 

ஊர்வசி ரௌத்தேலா கோலியின் குடும்பத்தில் கும்மி அடிக்காமல் இருந்தால் சரி.