முதுகில் ரத்த காயம்..! தழும்புகள் தெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி பட நடிகை! யார், ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை முதுகில் தழும்புகளுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


வளர்ந்து வரும் பாலிவுட் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை திஷா பட்டானி. இவர் முதன்முதலாக "எம்.எஸ். தோனி" திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், "கேல்வின் கிளைன்" உள்ளாடை நிறுவனத்திற்கு மாடலாக தன்னுடைய கட்டழகினை வெளிப்படுத்தி வந்தார். சில  மாதங்களுக்கு முன் வெளியான "மலாங்" என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திஷா பட்டாணி ஒரு கிளினிக்கின் தொடக்க விழாவை சிறப்பிப்பதற்காக கலந்துகொண்டார். அப்போது அவர் முதுகு முழுவதும் தெரியும் படியான ஆடை ஒன்றை அணிந்திருந்தார்.

அந்த ஆடையில் அவரை கண்ட ரசிகர்கள் மெய்மறந்து போயினர். அப்போது அவருடைய முதுகில் ஏகப்பட்ட தழும்புகள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர் மறைக்காமல் பொதுவெளியில் காண்பித்து வந்தார். இது அங்கு குழுமியிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருந்தது. அடுத்த சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வைரலானது.

அதன்பின்னர் திஷா பட்டாணி, "மன அமைதி, உடல்சோர்வு இன்மை, உற்சாகம், சீரான ரத்த ஓட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரம்பரிய முறையில் சிகிச்சை பெற்று வருவதால் முதுகில் அத்தகைய தழும்புகள் ஏற்பட்டன" என்று பதிலளித்தார்.

தற்போது மீண்டும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.