நடிகை பிக்பாஸ் தர்ஷன் காதல் முறிவுக்கு காரணம்! முதல் முறையாக ஷெரின் வெளியிட்ட தகவல்!

தன்னைப்பற்றி சமூகவலைத்தளங்களில் ஏற்பட்டு வந்த வதந்திகளுக்கு நீண்ட நாட்கள் பிறகு நடிகை ஷெரின் பதிலளித்துள்ளார்.


துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷெரின். சென்ற பிக்பாஸ் சீஸனில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார். மேலும், சக போட்டியாளராக இருந்த தர்ஷனை இவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வதந்திகளை ஏற்படுத்தினர். பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே வனிதா, ஷெரின் தர்ஷனை காதலிப்பதாக கூறினார். ஆனால் அது வெறும் நட்புதான் என்று ஷெரின் வனிதாவுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்த பிறகு தர்ஷன் மற்றும் அவரது காதலியான சனம் ஷெட்டி பிரிந்தனர். இதற்கு ஷெரின் தான் காரணம் என்று சமூகவலைத்தளங்களில் சனம்ஷெட்டி குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ரசிகர்கள் ஷெரினை சமூக ஊடகங்களில் நகையாடினர். மேலும் அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் மோசமாக கலாய்த்தனர்.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஷெரின் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். "என்னை பற்றி எவ்வளவு பேசினாலும் பொறுத்து கொள்வேன். ஆனால் என் குடும்பத்தினரை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. யாரோ செய்த தவறுக்காக என்னையும் என் குடும்பத்தையும் மோசமாக வர்ணிப்பது கண்டனத்திற்குரியது. இரண்டு பேர் காதலில் இருந்து பிரிவது காட்டிலும் இந்த நாட்டில் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

இந்த சமயத்தில் எனக்காக ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் சண்டை போடுவதற்கும், எனக்காக சண்டை போடுவதற்கும் நிறைய பேர் கிடைத்துள்ளதால் நான் என்னை மிகுந்த அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இதற்கு மேல் இந்த விவகாரத்தில் குறித்து நான் எந்த வித அறிக்கையையும் வெளியிடமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.