பிக் பாஸ் வீட்டில் வசித்து வரும் மீரா மிதுனின் கணவர் பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமணம் ஆகவில்லை! ஆனால் 2 ஆண்டுகள் அவருடன் குடித்தனம் நடத்தினேன்! அம்பலமாகும் பிக் பாஸ் மீராவின் அந்தரங்கம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி அடைவதில் முழுமனதோடு ஈடுபட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பலருடன் பல்வேறுவிதமான பிரச்சனைகளை மீரா மிதுன் செய்து வருவது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய போக்கு பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் சிலர் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டினுள் நுழைந்தவுடன் தனக்கு முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்றும் காரணமே தெரியாமல் தன்னை அவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவருக்காக காத்திருப்பதில் பயனேதும் இல்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் பற்றிய உண்மையை மீரா மீத்தேன் உறவினர் ஒருவர் வெளியே கொண்டு வந்துள்ளார். அவர் கூறுகையில், " மீரா மிதுன் தன் கணவருடன் 2 ஆண்டுகள் சந்தோஷமாக வசித்து வந்தார்.
பின்னர் ஏற்பட்ட மனக்கசப்புகளால் கணவரை வற்புறுத்தி விவாகரத்து கேட்டு பெற்றார். மேலும் தன்னுடைய கணவருடன் இணைந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மீரா மிதுன் சமூகவலைத்தளங்களில் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்" என்றும் கூறியுள்ளார்.
அதில் ஒரு புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கண்ட பொதுமக்கள் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.