16 வயது மகனை வைத்துக் கொண்டு 9 வயது இளைய நடிகருடன் டேட்டிங்! 45 வயது நடிகை சொல்லும் காரணம்!

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் நெருக்கமாக இருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலைக்கா அரோரா புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளுள் ஒருவராவார். இவருக்கு அர்பாஸ் கான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 16 வயது நிரம்பிய மகன் உள்ளார். இவர் பெயர் அர்ஹான். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். அர்ஹான், தன் தாய் மலைக்காவுடன் வளர்ந்தார்.

இந்நிலையில், சமீபமாக மலைக்காவும், பிரபல பாலிவுட் நடிகர்களுள் ஒருவரான அர்ஜுன் கபூர் நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் மலைக்கா ஒரு வலைத்தளத்திற்காக பேட்டி அளித்தார். அப்போது அவர், "என் முதல் திருமணம் முடிவடைந்த போது, நான் மிகவும் பயந்தேன். என் மனம் உடைந்து விடும் என்று அஞ்சினேன். அப்போது எனக்கு இரண்டாவது திருமணம் பற்றிய யோசனைக்கு இடமே இல்லாமல் இருந்தது.

சிறிது காலம் கழித்து எனக்குரிய கணவரை தேர்ந்தெடுக்க விரும்பினேன். அப்போதுதான் அர்ஜுன் கபூருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் நெருக்கம் காதலாக மாறி, தற்போது இருவரும் நல்ல புரிதலில் உள்ளோம்" என்று கூறினார்.

மேலும் கூறுகையில், "எனக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் நான் நேர்மையாக இருப்பேன். அவ்வாறே என் மகனிடம் என்னுடைய எண்ணங்களை பற்றி கூறினேன். அவனும் அதை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறான். தற்போது நெருக்கமானவர்கள் அனைவரும் என் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு நல்ல புரிதலில் வாழ்ந்து வருகிறோம்" என்றார். 

இவருக்கும் அர்ஜுன் கபூருக்கும்  9 ஆண்டு இடைவெளி உள்ளது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "உறவில் வயதிற்கு என்றும் இடமில்லை. இரு மனங்கள் நன்றாக புரிந்து கொண்டாலே உறவு செழித்து வளரும். சாபக்கேடாக நம் நாட்டில் தான் உறவில் கூட வயதை பார்க்கின்றனர்" என்று வருத்தப்பட்டார்.

இந்த பேட்டியானது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.